உலகக் கிண்ணத்தை வென்று
வரலாறு படைக்கப் போவது யார்?
நாளை அர்ஜெண்டினா – பிரான்ஸ் பலப்பரீட்சை

உலகக் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நாளை மலேசியா நேரப்படி இரவு 11.00 மணிக்கு நடைபெறுகிறது.

1978,1986 ஆம் ஆண்டில் இருமுறை உலகக் கிண்ணத்தை அர்ஜெண்டினா வென்றது.

1998, 2018 ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் இரு முறை உலகச் கிண்ணத்தை வென்றது.

இப்போது 3 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல இரு குழுக்களும் நாளை பரபரப்பான இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

பிரபல கோல் மன்னன் மெஸ்ஸி அர்ஜெண்டினா குழுவுக்கு தலைமை ஏற்கிறார்.

அதேசமயம் இளம் கோல் மன்னன் மாப்பே பிரான்ஸ் குழுவின் முதுக்கெலும்பாக விளங்குகிறார்.

இதனிடையே இன்றிரவு 11.00 மணிக்கு நடக்கும் 3 ஆவது இடத்திற்கான போட்டியில் குரோசியாவை எதிர்த்து மொரோக்கோ மோதுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles