நிலச்சரிவில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு
தலா 10,000 வெள்ளி
டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கெந்திங் மலை நிலச்சரிவில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நேற்றிரவு 9.51 மணிக்கு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு வருகை புரிந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிலவரங்களை நேரில் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர், துயரச் சம்பவத்தில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் வெள்ளி பிரதமர் துறை அமைச்சு – இயற்கை பேரிடர் மூலமாக வழங்கப்படும் என்றார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தகவல் அமைச்சர் பாமி பாட்சில், உலு சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன், துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உட்பட பல தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles