
தித்திக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் கனி ஜோகாரி மற்றும் யாயாசான் பெனா நூசா அறவாரியத்தின் ஏற்பாட்டில் இன்று 200 குடும்பங்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பண்டிகையை முன்னிட்டு டத்தோஸ்ரீ அப்துல் கனி ஜோகாரி அன்பளிப்புகளை வழங்கி உதவி புரிந்து வருகிறார்.
அந்த வகையில் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு தித்தி வங்சா தொகுதியில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு அன்பளிப்புகளையும் ரொக்கத்தையும் வழங்கினார்.
டாக்டர் புளோரென்ஸ் ஜோன் இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தார்.
வசதி குறைந்த மக்கள் கிறித்துமஸ் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


