மரண எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது!
கட்டி அணைத்தபடி
தாய் – மகள் சடலம் மீட்பு!

பத்தாங் காலி – கெந்திங் மலை தொடரில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இடுபாடுகளில் சிக்கிக் கொண்ட 12 பேரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது.

நேற்று மாலையில் கட்டி அணைத்தபடி தாய் மற்றும் மூன்று வயது பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு படை இயக்குனர் டத்தோ நோர்ஸாம் காமீஸ் தெரிவித்தார்.

700 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

காயம் அடைந்தவர்கள் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனிடையே நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்கள் இன்னும் துயரச் சம்பவத்தில் இருந்து மீளவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles