மலேசியா தமிழர் சங்கத்தின்
20 ஆம் ஆண்டு விழா!
டாக்டர் இராமசாமி சிறப்பு வருகை

மலேசியா திருநாட்டில் தமிழ் மொழி, இனம், கலை கலாச்சாரத்தை பேணி காப்பதில் துணிந்து போராடிக் கொண்டிருக்கும் மலேசியா தமிழர் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் ஜாலான் ஈப்போ முத்தியாரா கொம்ப்ளக்ஸில் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

மலேசியா தமிழர் சங்கத்தின் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான எம்.ஜே. கணேசன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன், செந்தமிழ் செல்வர் ஒம்ஸ் பா. தியாகராஜன், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி கெஅடிலான் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

ஆடல் பாடல் இன்னிசை விருந்துடன் நடைபெறும் இந்த விழாவில் தமிழ் இனத்திற்காக அரும் பாடுபட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.

500க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என்று மலேசிய தமிழர் சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் பரமசிவம் மருதை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles