22 மாதங்களாக
விசாரணைக்காக காத்திருக்கும்
33 சொஸ்மா கைதிகள்

கெடா சுங்கை பட்டாணியைச் சேர்ந்த 33 சொஸ்மா கைதிகள் கடந்த 22 மாதங்களாக விசாரணைக்கு காத்து கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

22 முதல் 60 வயதுக்கு உட்பட்ட இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சொஸ்மா கைதிகளில் ஒருவர் தனது நிறைமாத கர்ப்பிணியை பார்க்க முடியாத வேதனையில் இருக்கிறார்.

போதைப் பொருள், குண்டர் கும்பல், கொலை சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் அனைவரும் கைது செய்துள்ளனர் என்று போலீசார் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 33 பேரில் 18 பேரை பிரதிநிதித்து பிரபல வழக்கறிஞர் ஆர் எஸ் ராயர் வாதாடுகிறார்.

குற்றச் சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதால் கபலி கும்பலை சேர்ந்த 10 பேருக்கு 18 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles