

நாங்கள் தங்கியிருந்த கூடாரத்தை திடீரென மண்மூடியதைத் தொடர்ந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட நாங்கள் ஊர்ந்து சென்று உயிர்த் தப்பியதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு தெரிவித்தனர்.
இந்தப் பேரிடரிலிருந்து உயிர்த்தப்ப முடியாமல் தன் இளைய சகோதரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தே லின் ஷூவான் (வயது 22) தெரிவித்தார்.
எங்களின் கூடாரம் திடீரென வலுவிழந்த்தைப் போல் நாங்கள் உணர்ந்தோம்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கூடாரம் மண் குவியலால் மூடப்பட்டது.
நான் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு தப்பியோடினேன்.
என் பெற்றோர்களும் ஊர்ந்தவாறு வெளியில் வந்தனர்.
இந்த சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்ததால் சிறார்களும் கைகுழந்தைகளும் பலியாக நேர்ந்ததாக அவர் கண்ணீரோடு தெரிவித்தார்.

