யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது!என்னிடம் பெயர் பட்டியல் உள்ளது! டத்தோஸ்ரீ இரமணன் அதிரடி அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் பிப் 25-
நாட்டில் உள்ள இந்தியர் தொழில் முனைவோருக்கு எவ்வளவு கடனுதவி வழங்கப்பட்டது என்பதற்கான பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது என்று
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

நாங்கள் வெறும் அறிவிப்பு மட்டுமே செய்கிறோம். ஆனால் கடனுதவி கிடைக்கவில்லை என்று சிலர் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் எந்த ஒரு உண்மையும் இல்லை.
நாங்கள் யார் யாருக்கு எவ்வளவு கடனுதவி கொடுத்தோம் என்று பெயர் பட்டியல் என் மேஜையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

அரசாங்க கடனுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும் போது எல்லா ஆவணங்களும் சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.

இது அரசாங்கம் மற்றும் பேங்க் ராக்யாட் மூலம் வழங்கப்படும் கடனுதவி ஆகும்.

என்னுடைய சொந்த நிதி என்றால் பரவாயில்லை.இது அரசாங்கம் வழங்கும் நிதி என்றால் ஆவணங்கள் தேவை.

இந்திய சமுதாயம் மற்றும் இந்திய தொழில் முனைவோருக்கு உதவ பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறோம்.

இன்று பேங்க் ராக்யாட் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்து இந்திய தொழில் முனைவோருக்கு கடனுதவிகள் நேரடியாக வழங்கப்பட்டது.

ஊடகவியலாளர் முன்னிலையில் நிதி வழங்கப்பட்டது.
ஆகவே அனைத்தும் நாங்கள் முறையாக செய்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles