துணிச்சலான பெண்மணி சந்திரமதி தனது சொந்த நிலத்திற்காக 50 ஆண்டுகளாக நீதி கேட்டு நெடுப்பயணம்!

பகாங் மாநிலத்தைச் சேர்ந்த திருமதி
சந்திரமதி அடைக்கனுக்கு வயது 91.

இவர் கடந்த 50 ஆண்டுகளாக தனது பூர்வீக நிலத்திற்காக சளைக்காமல் போராடி வருகிறார்.

தனது தந்தை அடைக்கன் வழங்கிய நிலத்தை பகாங் ரவூப் மாவட்ட நில இலாகா எடுத்துக் கொண்டது.

இந்த நிலத்தை மீட்க தெமர்லோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு மனுவை முறையாக விசாரிக்கும்படி தெமர்லோ உயர் நீதிமன்றத்திற்கு அப்பீல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் வரும் டிசம்பர் 21,22 ஆம் தேதிகளில் இவர் வழக்கு மனு முழு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளாக தனது நிலத்தை மீட்க இவர் நடத்திய போராட்டம் கொஞ்சமல்ல.

இன்னமும் மன உறுதியோடு நீதிமன்ற படிகளை ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்

நீதிக்கான போராட்டத்தில் அவரது விடாமுயற்சி உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.

நிலம், வீடு, உடைமைகளை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.

அந்த வரிசையில் தானும் இடம் பெறக் கூடாது என்ற வைராக்கியத்தோடு பிள்ளைகளின் துணையோடு போராடி கொண்டிருக்கிறார் மூதாட்டி சந்திரமதி.

இவரின் சார்பில் பிரபல வழக்கறிஞர் ஆர். கங்காதரன் வாதாடுகிறார்.

இவருக்கு நீதி கிடைக்க நாமும் துணை நிற்போம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles