
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி கேள்வி எழுப்புவதற்கு பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சாடினார்.
இந்த வரலாற்று ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த கடைசி நபராக இவர் இருக்கட்டும் என்றார் அவர்.
நாளை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கிறார்.
இவருக்கு முழு ஆதரவு தர பல கட்சிகள் முன் வந்திருப்பதால் அவர் அமோக வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை.

