ஐவருக்கு சாதனையாளர் விருதை வழங்கி சிறப்பித்தது மலேசியா தமிழர் சங்கம்

மலேசியா திருநாட்டில் இனம் மொழிக்காக தொண்டாற்றிய ஐந்து பேருக்கு மலேசியா தமிழர் சங்கம் சாதனையாளர் விருதை வழங்கி நேற்று சிறப்பித்தது.

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தலைமையில் மலேசியா தமிழர் சங்கத்தின் தேசிய தலைவர் எம்.ஜே. கணேசன் முன்னிலையில் ஐவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

பத்துமலை திருத்தலத்தில் 144 ஆடி உயரத்திற்கு தமிழ் கடவுள் முருகப் பெருமானின் சிலையை அமைத்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா, மலேசியா தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் பெ. இராஜேந்திரன், சிறந்த வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர் சந்திர சூர்யா, ஆகையப் படையில் சேவை ஏற்றி சாதனை படைத்த மேஜர் ராமசாமி, எவரெஸ்ட் சிகரத்தில் பலமுறை கால் பதித்த ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles