

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் மனித வள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் உட்பட மொத்தம் 11 இந்திய எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கடந்த மூன்று தவணைகளாக பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் வி. சிவகுமார் அமோக வெற்றி பெற்று வருகிறார்.
இம்முறை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய அமைச்சர் சிவகுமார் ஆவார்.


ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத் துறை துணை அமைச்சருமான ராம் கர்ப்பால் சிங், Damansara நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். எஸ். ராயர், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனுஸ் வரன் மற்றும் ம இகா சார்பில் தாப்பா தொகுதியில் வெற்றி பெற்ற டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இம்முறை பக்கத்தான் ஹரப்பான் சார்பில் 10 இந்திய எம்பிக்களும் தேசிய முன்னணி சார்பில் 1 எம்பியும் அவையில் இடம் பெற்றுள்ளனர்.

