
கோலாலம்பூர் மார்ச் 15-
மக்களாட்சி என்பது மக்களே தனக்கு விரும்பியவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்ற அடிப்படையில் அமைந்த ஒரு கொள்கை அல்லது தத்துவமாகும்.
அதுவே இன்று வரை ஒர் அரசியல் கூட்டமைப்பாக விளங்கி வருகிறது.
மக்களின் பெரும்பான்மை சக்தியையும்,
இயங்கும் ஆற்றலையும்
வருங்கால சமுதாய மறுமலர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இந்த மக்களாட்சி தத்துவம் முகாமையாக பயன்படும்.
இதன் வழி மக்களும், நாடும் பெரிய அளவில் முன்னேற்றத்தை காணும் என்பது தின்னம்.
இந்த மக்களாட்சியின் திடமான அமைப்பு முறையையும்
மற்றும் அதன் அணுகுமுறையையும் எந்த சமுதாயம் முழுமையாகப் புரிந்து கொண்டு அதை நடைமுறைப் படுத்த முன்வருகிறதோ அந்த சமுதாயமே வருங்காலத்தில் மிகப்பெரிய சாதனை கண்ட இனமாக வரலாற்றில் தடம் பதிக்கும்.
முதலில் மக்களாட்சி நடைமுறையை வருங்கால சமுதாயத்திற்கு கொண்டு செல்லுவதற்கு ஏதுவாக பள்ளி தொடங்கியே களம் அமைக்க வேண்டும். இதன் வழி ஆரம்ப கட்டம் தொடங்கி சமுதாயத்தில் விழுப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
அதற்கு ஏற்றவாறு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தையும் எளிதாக்க வேண்டும். அதன் பிறகு கல்வி சாலைகளில் அரசியலமைப்பு சட்டம் குறித்தும் பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும். அடுத்த தலைமுறை அரசியலின் முக்கியத்துவம் தெரிந்தால் மட்டுமே அரசியலில் இணைந்து, சமுகத்தின் பொருளாதார மற்றும் வாழ்வாதார தீர்மானங்கள் எடுக்கும் இடத்திற்கு நாம் செல்ல முடியும்.
விழிப்புணர்வு அடைந்த ஓர் சமுதாயம் வியக்கத் தக்க முன்னேற்றத்தை காணும்.
மக்களாட்சி குறித்த தத்துவத்தையும்,
விழிப்புணர்வையும்
ஏற்படுத்த தவறி விட்டோமானால்
ஒவ்வொரு தவணையிலும் நடைபெறும் தேர்தலில் நாம் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே இருப்போம். மாறாக எந்த மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் நம்மால் கொண்டு வர இயலாது. மாறாக இந்திய சமுதாயத்தை இருண்ட காலத்தை நோக்கியே அழைத்துச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை.
கணேசன்
உரிமை கட்சி
பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர்.

