

2025 ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டின் உடைய புனித ரமலான் மாத நோன்பு உலக அளவில் இஸ்லாமியர்களால் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மலேசிய திருநாட்டில் வாழக்கூடிய இஸ்லாமியர்கள் புனிதமான இந்த ரமலான் காலத்தில் நோன்பு இருந்து இறை வணக்கத்தின் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவ்வப்போது தான தர்மங்களிலும், ஏழைகளுக்கு உதவுவதிலும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் . வசதி குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டு தோறும் அதில் ஒரு பகுதியாக பேரா இந்திய முஸ்லிம் இயக்கமான பிரிம் இன்று இங்குள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் தேவானில் கிட்டத்தட்ட நூறு பேர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
இரண்டு கட்டங்களாக வழங்குவதாகவும் முதலில் 100 நபர்களுக்கும் மறுநாள் மேலும் 100 நபர்களுக்கு வழங்குவதாக பிரிம் இயக்கத்தின் தலைவர் முகமட் அரிப் அலியா கூறினார்.
இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகை அளித்த மனிதவள மேம்பாட்டு கழத்தின்(;human resource devepment corporation) ( hrdc) தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா ஷாகுல் டவுட் நோன்பு பெருநாள் அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார்.
பிரிம் இயக்கம் இந்த சேஙையை ஆண்டு் தோறும் நடத்தி வருகிறது. இன்று இங்கு நடைபெற்ற நிகழ்வு சிறப்புடன் நடைபெற டத்தோ வீரா ஷாகுல் டவுட் ஆதரவு வழங்கியதாகவும் முகமட் அரிப் அலியா கூறினார்.

