நிலச்சரிவில் உயிர் இழந்த ஆறு குடும்ப உறுப்பினர்களுக்கு சொக்சோ இழப்பீட்டு தொகை

நாட்டை உலுக்கிய பத்தாங் காலி- கெந்திங் மலை நிலச்சரிவில் உயிர் இழந்த ஆறுவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொக்சோ உதவித் தொகை வழங்கப்படும் என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.

பள்ளி சிற்றூண்டியில் பணிபுரிந்த நூருல் அஸ்வாணி என்பவரும் இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தார்.

இவரின் இல்லத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் சிவகுமார் நூருலின் தாயாரிடம் மரண சகாய நிதியாக 2,000 வெள்ளியை வழங்கினார்.

மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆயுள் முழுவதும் 250 வெள்ளி வழங்கப்படும்.

இதர ஐந்து பேருக்கான சொக்சோ உதவித் தொகை விரைவில் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles