இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலோங்கச் செய்வது அவசியம்- கோபிந் சிங் டியோ எதிர்ப்பார்ப்பு

இனக்களுக்கிடையிலான ஒற்றுமையை எப்போதும் வலுவுடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ இன்று கேட்டுக் கொண்டார்.
இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார்.
இலக்கவியல் அமைச்சில் மலாய், சீனர் இந்தியர்கள் உட்பட கிழக்கு மலேசியாவிலுள்ள பிற இனத்தவர்களும் பணிபுரிவதாக அறிவித்த அமைச்சர்,
தமதமைச்சில் அனைத்து இன அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து சேவையாற்றுவது தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மலேசியர்களாகிய நாம் அனைவரின் நம்பிக்கையை மதித்து ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம். அதற்குச் சான்றாக இன்றைய நோன்பு துறப்பு நிகழ்ச்சி திகழ்வதாக அமைச்சர் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles