சுமூகமான தீர்வு காணப்படும் வரை ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உடைக்கப்படாது: மேயர் அறிவிப்பு

சுமூகமான தீர்வு காணப்படும் வரை ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ  பத்ரகாளியம்மன் ஆலயம் உடைக்கப்படாது என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைவர் மேயர் டத்தோஸ்ரீ மைமுனா உறுதி கூறினார்.

இந்த ஆலயம் அமைந்துள்ள நிலம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாகும். இங்கு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட ஆலயம் பல ஆண்டுகளாக இங்கு உள்ளது. இங்கு பக்தர்களும் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகையால் இந்த விவகாரத்தில் உடனடியாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. குறிப்பாக ஆலயத்தின் மீதும் நாம் கை வைக்க முடியாது.

அதன் அடிப்படையில் இந்த ஆலயத்திற்கு மாற்று நிலம் வழங்குவதற்கு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆலய நிர்வாகம் இதே நிலம் வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

ஆகவே  இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி ஒரு சுமுகமான முடிவு எடுக்கப்பட வேண்டும்.

அதுவரை ஆலயம் உடைக்கப்படாது. ஆலயத்தில் பக்தர்கள் வழக்கம்போல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

இதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படாது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles