மஸ்ஜிட் இந்திய வீரா பத்ரகாளியம்மன் கோவில் விவகாரத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் – டத்தோஸ்ரீ இரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர் மார்ச் 21-
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள வீரா பத்ரகாளியம்மன் கோவில் விவகாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பார்வைக்கு கொண்டு செல்வேன் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

அதேவேளை
மடானி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் எந்தவொரு ஆலயமும் உடைபடாது எ்றார்.

கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் 130 ஆண்டுக்கால வரலாற்றை கொண்டதாகும்.

இவ்வாலயம் அமைந்துள்ள நிலம் தற்போது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்

இந்த நிலத்தில் பள்ளிவாசல் கட்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த பிரச்சினை நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இலக்காக உள்ளது.

பிரதமரின் வலியுறுத்தலின் அடிப்படையில் நான் இன்று இந்த ஆலயத்திற்கு வந்தேன்.

ஆலய நிர்வாகத்துடன் சமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

அதே வேளையில் பொதுமக்களும் பல கோரிக்கைகளை என்னிடம் முன்வைத்தனர்

இந்த கோவில் இதே இடத்தில் நிலை நிறுத்தப்பட்ட வேண்டும் என்பது தான் கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையாக உள்ளது.

எது எப்படி இருந்தாலும் மடானி அரசாங்கத்தில் எந்தவொரு கோவிலையும் உடைக்காது.

இதற்கான வாக்குறுதியை நான் வழங்குகிறேன்.

அதே வேளையில் அவர்களின் கோரிக்கைகள் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்வேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles