
சுங்கைபட்டாணி, மார்ச் 25-
இன்றைய தொழில்நுட்பம் முற்றிலும் மாறுப்பட்ட நிலையில் இருப்பதால் நமது பிள்ளைகளின் கல்வியும் உலகம் நோக்கிச் செல்லும் அந்த புதிய தொழில்நுட்ப கல்வியினை பயின்றால் மட்டுமே அவர்களோடு போட்டி போடமுடியும் என கிம்மா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் பின் காதிர் வலியுறுத்தினார்.
சுன்கைபட்டாணி முஸ்லிம் லிக் மண்டபத்தில் நிகழ்ந்த நோன்புப்பெருநாள் அன்பளிப்பு வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டு தொடர்ந்து உலகம் AI தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி அடைந்து வருவதை குறித்து பேசிய அவர் சீனாவில் டிரைவர் இல்லாத வாகனங்களும் பேருந்துகளும் கண்டு பிடித்து தயார் நிலையில் வைத்திருபாதக சொன்னார்.

நமது பிள்ளைகளை குறிப்பிட்ட கல்விக்குப் பிறகு அவர்களை வேலைக்கு அனுப்புவதை விட்டு விட்டு புதிய தொழில்நுட்டபத் துறையினை அவர்கள் கற்பதற்கு நாம் வழி வகுத்தால் மட்டுமே காலத்தோடு அவர்கள் போட்டி போட்டு அவர்கள் வெற்றி பெறமுடியும் என்றார் அவர்.
இந்த நாட்டில் சலுகைகள் அனைத்தும் பூமி புத்ராக்களுக்கு மட்டுமே உண்டு. நமக்கு இன்னும் பூமி புத்ரா அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதற்குத்தான் தாம் போராடாடுவதாகவும் தமது போராட்டத்திற்கு பின்னால் யாரும் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழிலதிபர் டத்தோ மாலிக் கலந்து 100பேருக்கு நோன்புப் பெருநாள் உதவித் தொகையினை வழங்கினார்.
கெடா கிம்மா கட்சி ஒவ்வொரு வருடமும்போல் இந்த வருடமும் வசதி குறைந்தவர்களுக்கு நோன்புப் பெருநாள் உணவுப்பொட்டங்களை வழங்கியதாகவும், பள்ளிமாணவர்களுக்கும் தங்களது உதவியினை ஒவ்வொரு வருடமும் கெடா மாநில கிம்மா கட்சி செய்து வருவதாக அதன் மாநிலத் தலைவர் நவாப் ராஜா கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக கெடா மாநில கிம்மா கட்சியின் தலைவராக இருந்து வரும் நவாப் ராஜா இதுவரை பதவிக்காகவும் பட்டத்திற்கும் கிம்மா கட்சியின் தேசியத் தலைவரிடம் விண்ணப்பம் செய்ததில்லை எனவும் தனது சேவைகள் அனைத்தும் மக்களுக்காகவே என கெடா கிம்மா கட்சியினைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

