SME வங்கி குழுமத்தின் 5 கோடி வெள்ளி வங்கி வணிகம் நிதி திட்டம் அறிமுகத்தை டத்தோஸ்ரீ இரமணன் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர் மார்ச் 25-
நாட்டில் உள்ள இந்திய சிறு தொழில் முனைவர் களை வர்த்தக துறையில் ஊக்கு விக்கும் வகையில் SME வங்கி குழுமத்தின் 5 கோடி வெள்ளி வங்கி வணிகம் திட்டத்தை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

நாட்டில் உள்ள இந்திய வணிகர்களுக்கு உதவும் வகையில் SME வங்கி குழுமம் இந்த வணிகம் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வணிகம் திட்ட அறிமுக விழா இன்று SME வங்கி குழுமத்தின் ஆடிட்டோரியம் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

Sme வங்கியின் தலைவர் Dato Muslim Hussain, தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைரூல் டிஷாம்மி, SME வங்கியின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ டாக்டர் முகமட் ஹர்டி இப்ராஹிம் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்திற்கு தேவையான இயந்திரங்கள், வர்த்தக உபகரணங்கள் வாங்க இந்த நிதி பெரிதும் உதவுகிறது.

குறிப்பாக ஒரு தொழில் முனைவோர் 1 லட்சம் வெள்ளி முதல் 3 லட்சம் வெள்ளியை 6 விழுக்காடு வட்டியில் கடனுதவியாக பெறலாம்.

இந்த SME வங்கி குழுமத்தின் 5 கோடி வெள்ளி வங்கி வணிகம் நிதிக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று டத்தோஸ்ரீ இரமணன் கேட்டுக் கொண்டார்.

சிறு தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் வணிகம் நிதி மூலம் பெரும் நன்மை அடையலாம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles