
கோலாலம்பூர், மார்ச் 26 – நேற்று தொடங்கி ரஹ்மா உதவித் தொகையின் இரண்டாம் கட்ட விநியோகிப்பை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு, கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 150 கோடி ரிங்கிட்டைக் காட்டிலும், இவ்வாண்டு 170 கோடி ரிங்கிட் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட உதவித் தொகை மூலம் நாட்டில் பெரியவர்களில் 60 விழுக்காட்டினர், அதாவது 85 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
நோன்பு பெருநாளை முன்னிட்டு வாழ்க்கை செலவினத்தைச் சமாளிக்கும் பெரும்பாலான மக்களின் தேவையில் மடாணி அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மக்களின் வாழ்க்கையைச் சமநிலையில் மேம்படுத்தும் முயற்சியாக ரஹ்மா அடிப்படை உதவித் தொகையான சாரா மற்றும் ரஹ்மா ஆகியவற்றின் ஒதுக்கீட்டை 300 கோடி ரிங்கிட் அல்லது 30 விழுக்காடாக அதிகரித்து மொத்தம் ஆயிரத்து 300 கோடி ரிங்கிட்டாக உயர்த்தியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்.தி.ஆர் தரவுத் தளத்தில் பதிவு செய்துள்ளவர்களின் வங்கி கணக்கில் இந்த உதவித் தொகை சேர்க்கப்படும். அதைத் தவிர்த்து சிம்பானான் நெஷனல் வங்கியிலும் இந்நிதியை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம்.
பெர்னாமா