
கோலாலம்பூர் மார்ச் 30-
சில தினங்களுக்கு முன் சமூக ஊடகத்தில் வெளியான காணொளி ஒன்றில் ஒரு பலூன் விற்பனையாளர் மீது கோலாலம்பூர் மாநகர மன்ற அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டது மக்களிடத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை.
கோலாலம்பூர் மாநகர மன்ற அதிகாரிகள் அந்த செயலை என்னதான் நியாயப்படுத்தினாலும் போது வெளியில் நம் மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டது ஏற்க முடியாது.
நம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை சமூக வலைதளங்கள் மூலமாக உலகம் பார்த்து கொண்டிருக்கிறது.
இது போன்ற செயல்கள் , சர்வாதிகாரம் போல ஒரு தோற்றத்தை உலக மக்களிடத்தில் காட்டக்கூடும்.
இது நம் நாட்டு சுற்றுலா துறையை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
ஆகவே, காவல்துறை இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பகாங் மாநில உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.

