மலேசியர்களின் இன ஒற்றுமைதான் நமது பலம்ஒன்றாக கைகள் கோர்த்து நோன்பு பெருநாள் கொண்டாடுவோம்! மஇகா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர், மார்ச் 29-
மலேசியர்களின் இன ஒற்றுமைதான் நமது பலம் என்பதால் நோன்பு பெருநாள் காலம் மட்டுமன்றி எல்லா காலங்களிலும் இன ஒற்றுமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்று நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நாட்டில் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இதனை ஒரு போதும் கைவிடாமல் ஒன்றாக கைகள் கோர்த்து, நாம் அனைவரும் “மலேசியர்கள்” என்ற அடிப்படையில் நோன்பு பெருநாள் கொண்டாடுவோம் என்று தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள போதிலும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை சீர்குழையவில்லை என்பதுதான் உண்மை. இந்த சூழ்நிலையை ஒரு சில தரப்பினர் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாலும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வலுவாக இருப்பதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நாம் அனைவரும் மலேசியர்கள். மலேசியாவில் மட்டுமே பல்லீன மக்கள் வாழ்வதை காண முடிகிறது. இவர்கள் அனைவரும் தொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் தோட்டப்புறங்களில் பல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். அந்த நிலை தொடர்ந்து நிலைபெற்று வருவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் வாழ்கின்ற பல்லீன சமுதாய மக்கள் அனைவரும் விருந்துபசரிப்பு நடத்தி கொண்டாடி மகிழ்கின்றனர்.
பல இன மக்களும் பல சமயத்தினரும் ஒருமித்துவாழும் இந்த மலேசியத் திருநாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நோன்பு பெருநாள் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இந்த இனிமையான இன்ப தருணத்தில் ம.இ.காவின் சார்பிலும் தன் குடும்பத்தின் சார்பிலும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles