பலூன் விற்பனையாளர் தாக்கப்பட்ட சம்பவம்!சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் – டத்தோஸ்ரீ ரோஸ்லி

கோலாலம்பூர் மார்ச் 30-
தலைநகரில்
பலூன் விற்பனையாளர் ஒருவர் கோலாலம்பூர் மாநகர மன்ற அதிகாரிகளால் கடுமையாக நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று
Gabungan Persatuan Penjaja Dan Perniaga Malaysia சங்கத்தின் தலைவர் DATUK Sri Haji Rosli Bin Sulaiman தெரிவித்தார்.

இவர் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தற்போது செர்டாங் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தினால்
அவரின் தாயார், சகோதரி மற்றும் சகோதரர் பெரும் துயரத்தில் உள்ளனர்.

அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். பலூன் விற்பனை யாளருக்கு விலா எலும்புகள் உடைந்த இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட டிபிகேஎல் அதிகாரிகளுக்கு எதிராக காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் போலீசார் முழு விசாரணை நடத்தி அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதிகாரிகள் எந்தச் சூழ்நிலையிலும் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் , இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் டிபிகேஎல் முறையாக செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles