

கோலாலம்பூர் மார்ச் 31-
மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று உகாதி பெருநாளை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தில் உகாதி பெருநாள் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சிலாங்கூர் – கோலாலம்பூர் தெலுங்கு சங்கத்தின் கிளைத் தலைவர் கிருஷ்ணா ராவ் இந்த விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.
இரவு 7.00 மணிக்கு மேல் சிறப்பு ஆராதனையுடன் நடைபெற்ற பூசையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.
மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா சுதாகரன் தமது துணைவியாருடன் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தார். சிறப்பு பூசைகளுடன் சுவாமி ஊர்வலமும் இடம் பெற்றது.
பின்னர் உகாதி புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாகமும் வாசிக்கப்பட்டது.சத்யா சுதாகரன், கிருஷ்ண ராவ் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.


விழாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பரதநாட்டியமும் இடம் பெற்றன. உகாதி பெருநாள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.
கடந்த காலங்களை போல் இவ்வாண்டும் உகாதி பெருநாள் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சத்யா சுதாகரன் தெரிவித்தார்.