பேராவில் சிறந்த தொழில் முனைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ஈப்போ, ஏப்ரல் 6-

தொழில் முனைவோர் உணர்வை மேம்படுத்தவும் மற்றும்
ஊக்குவிக்கும்
நோக்கில் , அதில் வெற்றிக்காணும் தொழில் முனைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஈப்போவில் சிறப்புடன் நடைபெற்றது.

தொழில் துறையில் மேம்பாடு கண்ட பல தொழில் முனைவர்களை கௌரவித்து அவர்களை அந்த துறைகளில் மேலும் மேம்பாடு காண வழிகாட்டியாக விளங்கும் SMIBA அமைப்பு ஆண்டு்தோறும் இந்த நிகழ்வை நடத்தி வருகிறது.

நாட்டில் இந்தியர்கள் பல தொழில் துறைகளில் மேம்பாடு காண்டு வருகிறார்கள்.

ஒரு சமுகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் துறை வர்த்தகம் முக்கிய பங்காற்றுகிறது.

அந்த வகையில் இந்தியர்கள் தொடர்ந்து ஊக்குவிக்க நடத்தப்படும் இந்த நிகழ்வில் இந்த ஆண்டு SMIBA பேராவில் மட்டும் அல்ல பல மாநிலங்களில் இருந்து வருகை அளித்த தொழில் முனைவர்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்

கடந்த 15 ஆண்டாக நடத்தப்படும் தொழில் முனைவர் விருதளிப்பு விழாவில் ஆண்கள மற்றும் பெண் தொழில் முனைவர்களுக்கும் விருதுகள் வழங்கி் கௌரவிக்கப்பட்டதாக அதன் ஏற்பாட்டுக் தலைவரும் SMIBA நிறுவன தலைவருமான மாலா பிரகாசம் கூறினார்.

இன்று தொழில் துறையில் இந்தியர்களின் வளர்ச்சி பெருமைப்படும் அளவிற்கு உள்ளதாக கூறினார்.

ஈப்போவில் உள்ள ஏ. கே.எஸ். மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு வருகை அளித்த பேரா , மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி வீரையா இந்த நிகழ்வில் தொழில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த தொழில் முனைவர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தார்

அவர் ஆற்றிய உரையில் , இந்தியர்கள் தொடர்ந்து தொழில் துறைகளில் மேலும் வளர்ச்சிக்காணவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதே வேளையில் வர்த்தக துறையில் இந்தியர்கள் மேம்பாடு காண அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை முறையே பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்

இந்த நிகழ்வில் ஏ. கே. எஸ் நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ டாக்டர் சக்திவேல் உட்பட பல பிரமுகர்கள் கலத்துக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles