
உணவுப் பொருளின் விலை உயர்வைக் குறைக்க கோழி சாப்பிடுவதை நிறுத்துமாறு பொதுமக்களிடம் கூறியதை கூறப்படுவதை பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இன்று மறுத்துள்ளார்.
பொருட்களின் விலை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை நான் எடுத்து கூறினேன்.
ஆனால் கோழி சாப்பிடுவதை நிறுத்தச் சொன்னேன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
தேவை மற்றும் சப்ளை இரண்டையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நான் பேசி வருகிறேன்.
மக்களை பாதிக்காத வகையில் பொருட்களின் விலை இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம் என்று பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

