

நாட்டில் உள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்களை நலனை காக்கும் வகையில் 2014 ஆம் ஆண்டில் மலேசியா தமிழ் பத்திரிகையாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இரண்டு தவணைகள் சங்கத்தின் தலைவராக செ.வே.முத்தமிழ்மன்னன் இருந்தார்.
அதன் பின்னர் சங்கத்தின் தலைவராக மக்கள் ஓசை ஆசிரியர்களில் ஒருவரான கு. தேவேந்திரன் பணியாற்றினார்.
இந்நிலையில் 2022 2024 ஆம் ஆண்டுக்கான முக்கிய பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட கு. தேவேந்திரனுக்கு 64
வாக்குகள் கிடைத்தன.
எதிர்த்து போட்டியிட்ட நம்பிக்கை இணைய ஊடகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி தயாளன் சண்முகத்திற்கு 58 வாக்குகள் கிடைத்தன.
இறுதியில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தேவேந்திரன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மலேசிய நண்பன் செய்தி ஆசிரியர் பார்த்திபனுக்கு 67 வாக்குகள் தமிழ் மலர் செய்தியாளர் கோபி கிருஷ்ணா வுக்கு 53 வாக்குகள் கிடைத்தன.
பொதுச் செயலாளர் பதவிக்கு தமிழ் லென்ஸ் ஆசிரியர் வெற்றி விக்டர் மற்றும் பொருளாளர் பதவிக்கு பெர்னாமாவின் கிறிஸ்ட் சின்னப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
துணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மலேசிய நண்பனைச் சேர்ந்த செய்தியாளர் குணாளனுக்கு 94 வாக்குகள் மற்றும் செய்தியாளர் சங்கீதா ராமச்சந்திரனுக்கு 28 வாக்குகள் கிடைத்தன.
இரண்டு செயலவை உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிட்ட தமிழ் நேசன் தர்வின் குமாருக்கு 53 வாக்குகள், ரவி முனியாண்டிக்கு 51 வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றனர்.
மலேசியா நண்பன் தீபன் கிருஷ்ணனுக்கு 41 வாக்குகள்,
ஜீவராஜா 38 வாக்குகள் மற்றும் மக்கள் ஒசை பி.மலையாண்டி 27 வாக்குகள் கிடைத்தன.
இருப்பினும் இவர்கள் மூவரும் மத்திய செயலவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

