உணவகங்கள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்

மலேசியா இந்தியர் உணவகங்கள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காணப்படும் என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.

மலேசியா இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் இன்று தோட்ட மாளிகையில் நடைபெற்றது.

பிரிமாஸ் சங்கத்தின் நிரந்தரத் தலைவர் டத்தோ ரெனா இராமலிங்கம், பிரிமாஸ் சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பிரிமாஸ் ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்த போது அவர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மூன்று மாதங்களில் தீர்வு காணும்படி உள்துறை மற்றும் மனித வள அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles