
இம்மாதம் 18 முதல் 24ஆம் தேதி வரை டிங்கி காய்ச்சல் சம்பவங்களின்
எண்ணிக்கை 3.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும் ஒருவர் மரணம் அடைந்தார்.
அதற்கு
முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 1,950ஆக இருந்தது.
என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ
டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இவ்வாண்டில் இதுவரை பதிவான டிங்கி காய்ச்சல் சம்பவங்களின்
எண்ணிக்கை 64,078 ஆகும் எனக் கூறிய அவர், கடந்தாண்டின் இதே
காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 25,794ஆக இருந்தது என்றார்

