பக்கத்தான் ஹரப்பானின் கொள்கை அறிக்கையை பின்பற்றி
1,500 வெள்ளி அடிப்படை சம்பளத்தை நிலைநிறுத்துங்கள்

பக்கத்தான் ஹரப்பான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் 1,500 வெள்ளி அடிப்படை சம்பளத்தை அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 1,500 வெள்ளி அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று எம்டியூசி முன்னாள் தலைமை செயலாளர் என்.கோபால கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

ஐந்து தொழிலாளர்கள் குறைவான உள்ள நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு 1,500 வெள்ளி அடிப்படை சம்பளம் வழங்குவதை ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.

இதுபோன்ற சிறு நிறுவனங்களுக்கு அரசாங்கம் நேரடியாக உதவி புரிய வேண்டும்.

சிறு நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் 1,500 வெள்ளி அடிப்படை சம்பளத்தை பெற வேண்டும். இதை அரசு உறுதி படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles