
கோலாலம்பூர்
Merdeka டேவரில் 118 அடி கட்டட உச்சியில் அனுமதியின்றி ரஷ்யா ஜோடிகள் ஏறி நின்று போஸ் கொடுத்த காட்சிகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில், ரஷ்ய ஜோடியினரை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த ஜோடியினர் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார்கள் என்று கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் Datuk Yahaya Othman இன்று தெரிவித்தார்.
அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவ்விருவரும் விசாரிக்கப்படுவார்கள்.
உலகின் இரண்டாவது உயரமான அந்த கட்டடத்தில் ஏறி நின்ற அவர்கள் படம் எடுத்து வெளியிட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு அம்சம் குறித்து மலேசியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

