அமைச்சர் சிவகுமாரின் வாக்குறுதியால்
இந்திய உணவகங்கள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு பிறக்கும்

இந்திய
உணவகங்கள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்கு இன்னும் மூன்று மாதங்களில்
தீர்வு காணப்படும் என்று மனித வள அமைச்சர் வி சிவகுமாருடன் வாக்குறுதி பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மூன்று மாதங்களில் தீர்வு காணும்படி உள்துறை மற்றும் மனித வள அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று நேற்று பிரிமாஸ் ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்த போது அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

மேலும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக குறித்து எங்களுடன் முக்கிய சந்திப்பு நடத்த அமைச்சர் முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது என்று சுரேஷ் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே நாங்கள் எதிர் நோக்கி இருக்கும் தொழிலாளர் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.

பிரிமாஸ் சங்கத்தின் நிரந்தரத் தலைவர் டத்தோ ரெனா இராமலிங்கம், பிரிமாஸ் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற பிரிமாஸ் ஆண்டு கூட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles