புயலால் பாதிக்கப்பட்ட கம்போங் மலாயு – சுபாங் பெர்டானா மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது- டத்தோஸ்ரீ இரமணன்!

சுங்கை பூலோ, ஏப்ரல் 7-
புயலால் பாதிக்கப்பட்ட சுங்கை பூலோ மக்களுக்கு நாடாளுமன்ற சேவை மையத்தின் சார்பில் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது என்று
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் தெரிவித்தார்.

நேற்று மாலை கம்போங் மலாயு சுபாங், சுபாங் பெர்டானா ஆகிய இடங்களில் வீசிய புயலால் பல வீடுகள், பொது வசதிகள் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

அதே வேளையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்கட்ட உதவிகளை சுங்கை பூலோ நாடாளுமன்ற பொது சேவை மையம் வாயிலாக வழங்கப்பட்டது.

குறிப்பாக தளவாடங்கள், உணவு, தங்குமிடம், அன்றாடத் தேவைகள் போன்ற உதவிகள் உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles