
புளோரிடா, ஏப்ரல் 7-
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற எம்ப்ரி-ரிடில் ரன்னிங் எலிமென்ட்ஸ் கிளாசிக் 2025 போட்டியில், மலேசியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை ஷெரீன் சாம்சன் வல்லபோய், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி இந்த ஆண்டின் முதல் பட்டத்தை வென்றுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6)நடந்த போட்டியில் 26 வயதான இவர் 53.72 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வடக்கு புளோரிடா அணியின் கேபி ஜான்சனுக்கு வழங்கப்பட்டது, அவர் 55.17 வினாடிகளில் ஓடி முடித்தார் .
ரோவனைச் சேர்ந்த நெவா லோர்ஜஸ்டே 56.91 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். சவால் நிறைந்த இந்த போட்டியில் வெற்றி பெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஷெரின் வெல்ல போய் தெரிவித்தா

