வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழகம் பெற்றுள்ளது என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். சற்று முன்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நமது தமிழக அரசு பெற்றுள்ளது.

இந்த சட்டமன்ற பேரவையில் நாம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார்.

பின்னர் அந்த மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம்.2வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles