Selangor Recreation Club புதிய விளையாட்டு மையம் கட்டுவதற்கு நிலம் தேவை

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த Selangor Recreation Club புதிய விளையாட்டு மையத்தை கட்டுவதற்கு திட்டம் கொண்டிருப்பதாக கிளப் தலைவர் அன்புரோஸ் சாமிநாதன் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் விளையாட்டு துறையில் இந்தியர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.

ஆனால் இப்போது இந்தியா விளையாட்டாளர்கள் மிகவும் குறைந்து விட்டது.

நாட்டில் இளம் விளையாட்டாளர்களை உருவாக்கும் பொருட்டு பொருட்டு புதிய விளையாட்டு மையத்தை கட்டுவதற்கு திட்டம் வகுத்து இருக்கிறோம்.

அந்த வகையில் Selangor Recreation Club க்கு நிலம் தேவைப்படுகிறது.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் எங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று அன்புரோஸ் சாமிநாதன் கேட்டுக் கொண்டார்

நேற்று Selangor Recreation Club க்கு சிறப்பு வருகை புரிந்த பிரபாகரனுக்கு கிளப்பின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Selangor Recreation Club மேற் கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஆதரவு வழங்குவேன் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

Selangor Recreation Club துணை தலைவர் ரவி, செயலாளர் கோகிலபாலன், பொருளாளர் மேஜர் சண்முகம், கிளப் நிர்வாகி பரந்தாமன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles