கெஅடிலான் தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இல்லை – பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர் ஏப்ரல் 22-
கெஅடிலான் கட்சி தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் வராது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்

கெஅடிலான் தொகுதி தேர்தலில் பல முன்னணி அமைச்சர்கள், துணையமைச்சர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் கட்சித் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்று வதந்திகள் பரவின.

இது கட்சி தேர்தல் என்பது உள்கட்சி விவகாரமாகும். இதனால் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

கெஅடிலான் தொகுதி தேர்தலில் அமைச்சர் நிக் நஸ்மி, துணை அமைச்சர் அடாம், அக்மால், சரஸ்வதி கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், பிரபாகரன், யுனிஸ்வரன் உட்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles