
தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டு விட கூடுதல் லாப ஈவு வழங்ப்படும் என்று அதன் தலைமை நிர்வாகி டத்தோ பி. சகாதேவன் கூறினார்.
கடந்த ஆண்டு 7 விழுக்காடு லாப ஈவு வழங்கப்பட்டது . இந்த ஆண்டு அது கூடுதலாக அதிகரிக்கும் . அதன் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இவ்வாண்டு ஜூன் மாதம் கோலாலம்பூரில் நடைபெற விருக்கும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றார்..
ஈப்போ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பேரா மாநிலத்தில் அதன் தேசிய நில நிதி கூட்டிறவுச் சங்கத்தின் பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
தேசிய நில நிதி கூட்டிறவுச் சங்கம் லாபகரமாக செயல்பட்டு வருகிறது. அது உறுப்பினர்களின் நன்மைக்கு தொடர்ந்து பல நல திட்டங்கள் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
தோட்டத் துறையில் தொழிலாளர்கள் பற்றாக் குறை நிலவினாலும் அதனை சமாளித்து செயல்படவேண்டிய நிலையில் உள்ளது என்றார்.
இதனிடையே இங்கு சுமுகமாக முறையில் நடைபெற்ற பேராளர்கள் தேர்வுக்கான தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. இதில் 845 பேராளர்கள் கலந்துக்கொண்டு வாக்களித்துள்ளனர்.
அதில் 18 பேராளர்கள் தேர்வுக்கு 21 பேர் போட்டியிட்டனர் . தேர்வு செய்யப்பட்ட 18 பேராளர்களின் பெயர்களை டத்தோ பி. சகாதேவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

