மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் புதிய முயற்சி – ஒப்பனை கலையரங்கப் பயிற்சி பட்டறை!

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில், ஒப்பனை கலைத்துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள சரண்யா ஒப்பனை கலைஞரின் வழிகாட்டுதலுடன் நடைபெறும், ஒப்பனை கலையரங்கப் பயிற்சி பட்டறை உங்கள் நகரத்தில் அருகே நடைபெறவுள்ளது. அழகு மற்றும் கலை இரண்டையும் ஒன்றாக இணைத்து, உங்கள் திறனுக்கேற்ப தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்தப் பயிற்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் ஒப்பனை கலை என்பது சுயதொழில் வளர்ச்சிக்கான முகாமை திறப்பாக மாற்றியமைந்துள்ளது. இந்த பயிற்சி பட்டறை மூலம், ஒப்பனை கலையின் அடிப்படைகள் முதல் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வரை விரிவாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. முகம் ஒப்பனை, திருமண ஒப்பனை, புகைப்படக்கலை ஒப்பனை உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய பயிற்சிகள், தொழில்முறை முன்னேற்றத்திற்கு வழிகாட்டவுள்ளது.

பயிற்சி நடைபெறும் விவரங்கள் :
நாள்: 19 ஏப்ரல் 2025 முதல் 11 மே 2025 வரை
இடங்கள் : பேராக், பினாங்கு, மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், ஜொகூர் & கோலாலம்பூர்

இந்தப் பயிற்சிப் பட்டறை நேரடியாக நடைபெறும், அதாவது உங்கள் அருகிலேயே! ஒவ்வொரு நகரத்திலும் தனித்துவமாகத் திட்டமிடப்பட்ட பயிற்சி, நேர்முக வழிகாட்டல், கலையரங்கச் செயல்பாடுகள், மற்றும் தொழில்முறை அனுபவங்கள் அடங்கிய வகையில் இருக்கும்.

இப்பயிற்சி உங்கள் ஆளுமையையும், திறமையையும் உலகிற்குக் காட்டும் அரங்கமாக அமையும். உங்கள் கைகளை ஒரு கலை கருவியாக மாற்றி, உங்கள் கனவுகளை நேரடி தொழில்முனைவு வெற்றியாக மாற்றும் பாதையை இந்தப் பட்டறை அமைக்கிறது என்றார் மணிமன்றங்களின் தேசியத் தலைவர் திரு முருகன் மணியம் தெரிவித்தார். மேலும், விபரங்களுக்கு மணிமன்றப் பேரவையின் manimandramhq@gmail.com மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புக் கொள்ளவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles