எல்.டி.பி.1 நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனை – வாகனத்திலிருந்து வெ.1.5 கோடி போதை பொருள் பறிமுதல்!

கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் (எல்.டி.பி.1)
211வது கிலோ மீட்டரில் குவாந்தான் நோக்கிச் செல்லும் தடத்தில்
போலீசார் மேற்கொண்ட அதிரச் சோதனையின் போது நான்கு சக்கர
இயக்க வாகனத்திலிருந்து ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்புள்ள
468.3 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப்
பிரிவினர் நேற்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
மேற்கொண்ட ‘கிழக்கு மண்டலத்திற்கான முதன்மை சோதனை‘
நடவடிக்கையின் போது ரோந்துப் போலீசார் அந்த வாகனத்தை கண்டதாகப்
பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, மிட்சுபிஸி டிரைட்டோன் ரக
வாகனம் ஒன்று சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு எதிர் திசையில்
பயணிப்பது குறித்து தங்களுக்கு புகார் கிடைத்ததாக அவர் சொன்னார்.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட
ரோந்துப் போலீஸ் குழுவினர் ஓட்டுநர் மற்றும் பயணிகள் இன்றி
பூட்டப்பட்ட நிலையில் அந்த வாகனம் சாலையோரம் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளத்தைக் கண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles