
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது. மாலை சற்று முன் வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டன என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், முன்கூட்டியே வாக்களித்தோரில் பெரும்பாலோர் காவல்துறை அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் என பொதுப்பணியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, 92.8% என்ற விகிதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சுமார் 5000 வாக்காளர்கள் இன்று வாக்களித்தனர்.
இடைத்தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மூன்று முக்கியக் கட்சிகள் –
🔹 தேசிய முன்னணி
🔹 தேசிய கூட்டணி
🔹 பி.எஸ்.எம்.
இந்த தேர்தலில் மும்முனை போட்டியுடன் களமிறங்கியுள்ளன.

