
கோவிட் 19 நோய் தொற்று மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மலேசியர்கள் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ளும்படி சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல் பூஸ்டர் தடுப்பூசியை போட்டு ஆறு மாதங்கள் கடந்தவர்கள் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.
இதுவரை 48.8 விழுக்காட்டினர் முதல் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ள வேளையில் 19 விழுக்காட்டினர் 2 ஆவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர்.
இம்மாதம் இறுதிக்குள் Pfizer BioNtech தடுப்பூசிகள் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

