பகாங் நில ஆக்கிரமிப்பு: போலீஸ் அதிரடி வேட்டை! வெளிநாட்டவர் உட்பட 60 பேர் கைது! நடவடிக்கை தொடரும்!

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பகாங் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கைகளில், வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

பகாங் மாநில அமலாக்கப் பிரிவு மற்றும் மாவட்ட வன அலுவலகத்துடன் இணைந்து காவல்துறை நடத்திய இந்த தொடர் நடவடிக்கைகளின் போது, இதுவரை 59 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த காலகட்டத்தில் நில ஆக்கிரமிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான 105 வாகனங்களும், 622 உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரவூப் மாவட்டத்தில் மட்டுமல்லாது, மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை மேலும் தீவிரப்படுத்தும் என்றும், சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles