நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோ கார்ட் கார் பந்தய போட்டி!மலேசிய அஜித் ரசிகர் மன்றம் ஏற்பாடு!

கோலாலம்பூர், மே 2-
நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மலேசிய அஜித் ரசிகர் மன்றம் நேற்று ஷா ஆலம் இவோல்ட் கார்டிங் அரங்கில் கோ கார்ட் கார் பந்தயத்தை நடத்தியது.

இப்போட்டியில் இருபது பேர் கலந்து கொண்ட வேளையில் முதல் மூன்று நிலை வெற்றியாளர்களுக்கு ரொக்கம், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 4 முதல் 20 வரையிலான இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் 13 இளைஞர் ஒருவர் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் இந்திய இளைஞர்கள் பங்குக் கொள்ள வேண்டுமென மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தின் தலைவர் டேவ்@ தேவேந்திரன் பன்னிர்செல்வம் தெரிவித்தார்.

இந்த போட்டி விளையாட்டுக்கு சிறந்த ஆதரவை Pergerakan Belia Selangor அமைப்பின் தலைவர் கவின் வழங்கியதாகவும் அவர் சொன்னார்.

ரசிகர் மன்றங்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களை கொண்டாடுவதுடன் சமூக சேவைகளிலும் ஈடுபட வேண்டியது அவசியம். ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டு அதில் பல இளைஞர்கள் இணைகின்றனர். இதுபோன்ற அமைப்புகளின் வழி நாம் நம் சமுதாய இளைஞர்களை நல்வழி படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியமாகும்.

அந்த வகையில் மலேசிய அஜித் ரசிகர் மன்றம் நான்காவது முறையாக இந்த கோ கார்ட் கார் பந்தயத்தை ஏற்பாடு செய்ததாக டேவ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மட்டுமின்றி அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என 100க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியை காண வந்திருந்தனர். நடிகர் அஜித்குமார் போல கார் பந்தயத்தில் இளைஞர் ஈடுபட வேண்டும். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டியை ஏற்பாடு செய்ததாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles