கட்டாய மருந்து விலை: மருத்துவர்கள் எதிர்ப்பு! மே 6ல் போராட்டம் – போலீஸ் அனுமதி கிடைக்குமா?

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் மருந்துகளின் விலைகளைக் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மலேசிய மருத்துவ சங்கம் (MMA) வரும் மே 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) புத்ராஜெயாவில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி, சங்கம் புத்ராஜெயா மாவட்ட காவல்துறைக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்றதை புத்ராஜெயா மாவட்ட போலிஸ் தலைவர், ஏசிபி ஏ. அஸ்மாடி அப்துல் அசிஸ் (ACP A. Asmadi Abdul Aziz) உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைதியான ஒன்றுகூடல் சட்டம் 2012-இன் கீழ் இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் இந்த போராட்டம் குறித்த இறுதி முடிவு போலீஸ் அனுமதியைப் பொறுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles