எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – டாக்டர் சுரேந்திரன்

ஷா ஆலம், மே 3-
அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில பிபிபி வாழத்துகளை பதிவு செய்கிறது என்று சிலாங்கூர் மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

அதேசமயம் தேர்ச்சி பெற்ற சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் பயில உரிய இடங்கள் வழங்கப்பட வேண்டும்.

எந்தவொரு மாணவரும் விடுபடக்கூடாது.
கடந்த காலங்களில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பயில வாய்ப்பு மறுக்கப்பட்ட புகார்கள் எழுந்தன.

இந்த ஆண்டு இதுபோன்ற புகார்கள் எழாமல் இருக்க தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் பயில உரிய வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இது மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் ஆகும்.

சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளில் பயில வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் எதிர்காலத்திற்கும் உத்தரவாதம் இருக்கும் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles