15 ஆண்டுகால மிம்தாவின் போராட்டத்திற்கு நல்ல பலன்! கூடிய விரைவில் நல்ல பதில் – டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம்

கோலாலம்பூர் மே 8-
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் 15 ஆண்டுகால போராட்டத்திற்கு இன்று நல்ல பலன் கிடைத்துள்ளது என்று மிம்தா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் தெரிவித்தார்.

மிக விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்த தருணத்தில் மடானி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சீம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம்.

உலோக பொருள் மறுசுழற்சி துறையில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள் என்ற மிம்தாவின் கோரிக்கையை மடானி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது..

எங்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று பெரிதும் நம்புகிறோம்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள நாங்கள் 15 ஆண்டுகால பல அமைச்சர்களை சந்திக்க ஏறி இறங்காத படிகள் இல்லை.

அந்த வகையில் எங்களுக்கு மிக விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.

கடந்த காலங்களில் எங்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்க மிம்தா தலைவர் டத்தோஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி தலைமையில் துன் சாமிவேலு பெரும் உதவியாக இருந்தார்.

அதன் பின்னர் டத்தோஸ்ரீ எம் சரவணன், சிவகுமார் போன்றோர் பெரும் உதவிகளை செய்தனர்.
ஆனால் அமைச்சர்கள் மாற்றத்தினால் எங்களுக்கு கோரிக்கை கைக்கூடவில்லை என்று அவர் சொன்னார்.

மிம்தா செயலாளர் முத்தப்பன் கூறுகையில் 10,000 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கையை முன் வைத்தோம்.

அந்த அடிப்படையில் எங்களுக்கு கண்டிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இப்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்றார் அவர்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மிம்தா உதவித் தலைவர் டத்தோஸ்ரீ தமிழ் செல்வம், பொருளாளர் பன்னீர், சங்கத்தின் உச்சமன்ற உறுப்பினர்கள் டத்தோ ஆணி முத்து, டத்தோ சரவணன், சத்தியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles