இந்தியர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் அருங்காட்சியகத்தை ம இகா உருவாக்க வேண்டும்! டத்தோ டாக்டர் கலைவாணர் கோரிக்கை

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் மே 19-
நாட்டில் இந்திய அருங்காட்சியகத்தை ம இகா உருவாக்க வேண்டும் என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டாக்டர் கலைவாணர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய அருங்காட்சியகம் அமைக்கப்படுவது தொடர்பாக இன்று ம இகா தலைமையகத்தில் அவர் தமது ஆதரவாளர்களுடன் இணைந்து மகஜரை வழங்க வந்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் அவரால் மகஜரை வழங்க முடியவில்லை. வேறொரு தேதியில் மகஜரை வழங்க வருவோம் என்று அவர் சொன்னார்.

பினாங்கு மாநிலத்தில் இந்து அறப்பணி வாரியத்தின் மூலம் தமிழ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறேன்.

அதே போல் ம இகா இந்திய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டால் அது நமது கலை கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் .

தமிழர்கள் பயன் படுத்திய பண்டை காலத்து பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும் போது அது நமது வரலாற்றை எடுத்துரைக்கும்.

மேலும் இந்த இந்திய அருங்காட்சியகத்தில் தூக்கில் தொங்கிய மலாயா கணபதி, சுதந்திரம் பெற்றுத் தர போராடி தலைவர்கள், நாட்டிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த இந்திய ஓட்டப் பந்தய விளையாட்டாளர்கள், மலேசிய ராணுவ படையில் பணியாற்றிய இந்திய வீரர்களின் வரலாறுகள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற ஆவண செய்ய வேண்டும்.

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முயற்சி செய்து இந்திய அருங்காட்சியகம் அமைக்க துணை புரிய வேண்டும் என்று டாக்டர் கலைவாணர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles