

கோலாலம்பூர் மே 23-
வரும் ஜூலை மாதம் 22 ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான 21 ஆம் ஆண்டு கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம் மற்றும் சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின் ஆதரவில் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்று பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.
இம்முறை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளி குழுக்களின் வருகையை எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
விலாயா மாநிலத்தில் 15 தமிழ்ப் பள்ளிகளும் சிலாங்கூர் மாநிலத்தில் 98 தமிழ்ப் பள்ளிகளும் உள்ளன.ஏராளமான தமிழ்ப் பள்ளி குழுக்கள் பங்கேற்றால் அது பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று அவர் சொன்னார்.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு நமச்சிவாயம் கிண்ணமும் பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு ரவீந்திரன் கிண்ண மும் வழங்கப் படுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் குழுக்கள் வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதிக்குள் பதிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

